Monthly Archives: August 2014

மிகவும் பிடித்த பாடல்


மின்னலே நீ வந்ததேனடி (மே மாதம் )
தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்)
முன்பே வா என அன்பே வா (சில்லுன்னு ஒரு காதல்)


உணர்ச்சிக் கவிஞர் ”காசி ஆனந்தன்” கவிதைகள்


எனக்கு கவிஞர் காசி அனந்தன் அவர்களின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும்.
சில கவிதைகள் கிழே .

மனிதன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
‘பசு பால் தரும்’
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
‘காகம்
வடையைத் திருடிற்று’
என்கிறான்.
இப்படியாக
மனிதன்…

முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.

பெண்..
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.

திமிர்..
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன

அடக்கம்..
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்

குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.

கண்ணோட்டம்..
செருப்பைப்பார்கையில் நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்

நிமிர்வு..
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?

கூண்டு..
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்

மண்..
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?

குடுகுடு..
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்.

தமிழா! – நீ பேசுவது தமிழா…?

அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை…
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை…
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை…

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?

கிழே உள்ள சுட்டியில் சென்றால் அவரின் கவிதைகள் நிறைய படிக்கலாம்.
http://krpsenthil.blogspot.in/2009/01/blog-post_4774.html
http://www.eegarai.net/t6285-topic


எனக்கு பிடித்த காதல் கவிதைகள்


அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன்
அலைகிறது !
தொட மாட்டோம் என்று
தூண்டில்கள்
சொல்லிவிட்ட பிறகும்
– மு. மேத்தா

என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத்
தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு !
– கனிமொழி

ஒரு பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும்
உன்னைப் பற்றியே
கனவு காண்கிறேன்
நீயோ பிள்ளை பெற்று
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பகலில் உறங்கப் பழகிவிட்டாய் .
– அரிக்கண்ணன்

பிரிவின் சாசனம்
எதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நம்பகுள்.
– செல்வராஜ் ஜெகதீசன்