Category Archives: Uncategorized

கலாப்ரியா


வாழை இலைகளைக்
காற்று கிழித்த பின்
தென்னை ஓலைகளைப்
படைத்திருப்பானோ
கடவுள்
(ராஜ சுந்தரராஜனுக்கு) – கலாப்ரியா


நாம் ஏன் இலக்கியம் படிக்கிறோம்?


நாம் ஏன் இலக்கியம் படிக்கிறோம்? நம்முடைய வாழ்வை செழுமைப்படுத்திக் கொள்வதற்காக. நம்முடைய நுண்ணுணர்வுகள் அற்புதமாக இருந்தால் வாழ்வும் அற்புதமாக இருக்கும்.


என் நூற்றாண்டு – தேவதச்சன்


என் நூற்றாண்டு – தேவதச்சன்

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்

என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்


வீடு திரும்பும் மகளின் பாதை – கரிகாலன்


வீடு திரும்பும் மகளின் பாதை – கரிகாலன்
—————————————-

கொரியன் தொடர்களைப் பார்க்கும் உன் தோழிகளிடையே
பாவ்லோ கொய்லோவைப் பின்தொடரும் அருமை மகளே

நீ விடுமுறைக்கு வீடு திரும்பும் பாதை
நம்மிருவரின் புனைவுகளாலான திருப்பங்களையுடையது

எப்போதும் நீ எழுந்து இடம் தரும் மூதாட்டிகளின்
ஆசீர்வாதத்தால்தான் உன் உள்ளங்கைகளில்
மழை பொழிந்துகொண்டே இருக்கிறது

ஜன்னலோரம் வெள்ளரிப்பிஞ்சு விற்பவனை
‘சார்’ என்றழைத்ததற்காய்க் கடிந்துகொண்ட
தோழியையும் நேசிப்பாயல்லவா

இவ்விளகிய மனமே உன் வாகனத்தின் பாதுகாப்புக் கவசம்

உன் செவிகளுக்குள் பாடிப் பாடி
சிறகுகளை வளரச் செய்திருக்கிறாளல்லவா காகா

அந்நம்பிக்கையில்தான்
ஆசிட் வீசும் கதைகள் நிறைந்த பாதையில்
நீ வந்துகொண்டிருக்கும்போதிலும்
பதற்றமின்றி உனக்கான இரவு உணவைத்
தயாரித்துக்கொண்டிருக்கிறாளுன் தாய்

அவளுடைய கனிந்த எண்ணங்கள்
உன்னைச் சுற்றியும் ஓர் அகழியை உருவாக்குகிறது

உன்னோடு உண்ணவும் படுத்துறங்கவுமான விழைவிலிருக்கும்
கறுப்பு நாய்க்குட்டி பெலிஷியாவின் கனவுகளை
எல்லா தேவதைகளும் அறிந்துதான் வைத்திருக்கின்றனர்

காமுகர்களும் பெண்களை பாலியல் தொழிலுக்குப் பழக்குபவர்களும்
உறுப்புகளைத் திருடுபவர்களும் நிறைந்த சந்தைகள் ஊடாக
விரைந்துகொண்டிருக்கிறதுன் வாகனம்

தைரியமாய்ப் பயணித்துக்கொண்டிருக்கும் நீ அறிந்ததுதானே
மகள்கள் வீடு திரும்பும் வாகனத்தை
கடவுள்தான் இயக்குகிறார் என்பது!

நன்றி – ஆனந்த விகடன் – 05\ 11\ 2014


இலக்கிய கூட்டங்கள் 2015


1. சாரு நிவேதிதா புத்தக வெளியீட்டு விழா.

2. சென்னை புத்தக திருவிழா – நெல்லை கண்ணன் பேச்சு

3. சுஜாதா விழா


Cognizant Interview Questions


1.Tell me about your project?
2.Why Java is independent?
3.What’s JDK?
4.What’s the version of Java you used?
5.Tell about the MVC Architecture?
6.What’s interface?
7.What’s abstract?
8.Why do we have the term implements? What exactly it does?
9.What’s the IDE you used?
10. IDE version?
11. Can you write the structure of web application
12.What’s ORDERBY?
13.What’s DISTINCT?
14.What’s VIEW?
15.What’s cursor?
16.What’s the version of websphere you used?
17.Tell me one big issue that you had fixed?
18.What’s your day today activity?
19.What’s web.XML
20.What are the tool that you used?
21. Any idea about JUNIT?
22.Hyriarchy of collections?
23.Difference between arraylist n vectorlist
24.What’s the use of synchronisation?
25.Why we have thread?
26.How can we implement thread?
27.What’s JAR?
28.Why do you wanna switch the company?


படித்ததில் பிடித்தது


“நமது கைகளை பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால்

நமது மூளையை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.”

– தோழர் கார்க்கி

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

– ஹெலன் கெல்லர்.

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத்திற்கு அளவிருக்காது.

– ஸ்டேட்ஸ்மென்


பெரியார் பற்றி பாவேந்தர்


தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார்

– பாவேந்தர்


இந்த வருடம் படித்த புத்தகங்கள் 2015


1. உணவு யுத்தம்
2. கேள்வி பதில்கள் 1 – சுஜாதா
3. கேள்வி பதில்கள் 2 – சுஜாதா
4. படித்ததும் கிழித்ததும் – பாமரன் –
5. நினைவோடை பிரமிள்- சு.ரா.


இந்த வருடம் பார்த்த படங்கள் – 2015


1. PK
2. பிசாசு
3. I
4. American Sniper
5. The Imagination Game+
6. Whiplash
7. என்னை அறிந்தால்
8. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்
9. எனக்குள் ஒருவன்
10. ராஜதந்திரம்
11. கொம்பன்
12. Yevade subramanyam
13. Detecive Byomkesh Bakshy
14. ஓகே கண்மணி
15. காஞ்சனா 2
16. புறம்போக்கு
17. மாஸ்
18. காக்க முட்டை
19. Premam
20. இன்று நேற்று நாளை
21. பாஹுபாலி
22. மாரி
23. சண்டிவீரன்
24. தனி ஒருவன்
25. மாயா
26. குற்றம் கடிதல்
27. Ennu Ninte Moideen
28. கத்துக்குட்டி
29. உப்பு கருவாடு